பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!

0
183

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!

திரெளபதி படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய போதும், அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை தனது பேட்டியின் மூலம் விளக்கமளித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் நாடக காதலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதைக்களமே திரெளபதி படம் என்று கூறியிருந்தார்.

திரெளபதி படத்தில் சொன்னது போலவே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் தனது பைக்கின் பின் புறத்தில் தவறான வாசகங்களை எழுதியுள்ளார். அந்த வாசகத்தை இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்: இந்த இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைத்தவர்கள் உடனே களை எடுக்கப்பட வேண்டும் என அழுத்தமாக கூறியிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் பல்வேறு நபர்களுக்கு வேகமாக பரவியது. சிலர் இந்த வாகனத்தின் விலாசத்தை இணையத்தின் மூலம் கண்டுபிடித்து பதிவிட்டனர். பின்னர், தவறான வாசகத்தை எழுதியிருந்த நபரை பிடித்து காவல்துறை தனது பாணியில் கவனித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக இருந்த வாசகம் காவல்துறையினரின் கவனிப்பால் நீக்கப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இனி எழுத கூடாது என்றும் அந்த இளைஞருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி டுவிட்டரில் தனது நன்றியை தெரிவித்தார். நாடக காதல் செய்பவர்களை இப்படித்தான் தோலுரிக்க வேண்டும் என்று இயக்குனரை பலர் பாராட்டி வருகின்றனர்.

Previous articleசந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?
Next articleஉலகக்கோப்பை இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!