பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!!

Photo of author

By Vijay

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!!

கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது, ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது எதிர் கட்சிகளிடையே சலசலப்பை உண்டாக்கி வருகிறது, இதனிடையே மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன, மேலும் பாஜகவுக்கு எதிராக யார் குரல் தருகிறார்களோ அவர்கள் குரல் வளை நசுக்கப்படுவதாக வும், அமலாக்கத்துறை, சிபிஐ , போன்ற அமைப்புகள் பயன்படுத்தி மிரட்டுவது அவர்களின் வாடிக்கையாக உள்ளது எனவும், பாஜகவின் இந்த செயலுக்கு எதிர் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே  கடந்த வாரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இதனை தொடர்ந்து அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்தது பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாட்டில் உள்ள அணைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் திங்கட்கிழமை மாலை ஐந்து மணி அளவில் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார், இந்த ஆலோசனையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் பேசப்படும் என தெரிகிறது.

மேலும் நேரில் வராத தலைவர்களுடன் வீடியோ கான்பரஸ் மூலமாகவும் பேசவுள்ளார், பாஜகவிற்கு எதிராக அனைத்து தலைவர்களும் இந்த ஆலோசனையில் ஒன்று சேர்வதால் பெரும் பரபரப்பு தற்போது நிலவி வருகிறது,நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில் பாஜகவை எப்படியும் வரும் தேர்தலில் தோல்வி அடைய செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்கட்சிகள் தற்போது தயாராகி வருகின்றனர், குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுவது அரசியல் நோக்கர்களால் உற்று பார்க்கப்பட்டு வருகிறது.