அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு!

0
198
Edappadi Palaniswami to visit Salem tomorrow as General Secretary of AIADMK!! The party decided to give an enthusiastic welcome!
Edappadi Palaniswami to visit Salem tomorrow as General Secretary of AIADMK!! The party decided to give an enthusiastic welcome!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பொதுக்குழு குழு சம்பந்தமான வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம் பொதுக்குழு முடிவு படி எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியாகும் என முடிவாகியது, இதனால் கட்சியின் அடுத்த பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் முதல் உத்தரவாக கட்சியில் உறுப்பினர் சேர்ப்பது தொடர்பாக கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்தார், மேலும் கட்சியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என்பதால் தற்போது அவரது இடத்திற்கு திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. குறிப்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். இதனிடையே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி தன்னை நேரில் வந்து அழைக்க வேண்டும் என கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நாளை வருகை தர உள்ளார், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக மாநகர செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாநகரத்திலும், அதேபோல் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிமுகவை இனி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்து செல்லும் என கட்சியினர் கூறி வருகின்றனர், இதனிடையே தனித்து விடப்பட்ட பன்னீர்செல்வம் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சுழண்டு கொண்டு வருகிறது.