பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!!

0
270
Famous Tamil film actor RK Suresh is set up by the police!!
Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!!

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆருத்ரா கோல்ட் திட்டம், இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதிகப்படியான வட்டி அதாவது 30 அளவிற்க்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமான பொதுமக்களிடம் இருந்து சுமார் 2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று அதற்கான வட்டி தொகையை தராமல் ஏமாற்றுவது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2022 மே மாதம் வரை முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர், மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதில் பல லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள், ஏராளமான பணம் உள்ளிட்டவை போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நிறுவனத்தில் ஒன்பது உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் ஹரிஷ் என்ற நபர் தற்போது போலீசில் சிக்கி உள்ளார், அவரிடம் நடத்திய விசாரணையில் 210 கோடி கையாடல் செய்திருப்பதை ஒப்புக் கொண்டார், மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷ் இந்த மோசடி திட்டத்தில் உடந்தையாக இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் ஆர்கே சுரேஷ் தமிழக பாஜகவில் உள்ளார் என்பதும், சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தனது குடும்ப விழாவை தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்தினார், மேலும் ஆருத்ரா வில் கிடைத்த பணத்தை வைத்து சமிபகாலத்தில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார். தற்போது வெளிநாடு தப்பிச் சென்றுள்ள அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து நடிகர் ஆர்கே சுரேஷ்யை விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனவும், மேலும் இந்த ஆருத்ரா மோசடி வழக்கில் யார் யார் சம்பந்த பட்டுள்ளனர் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Previous articleஅதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு!
Next articleசுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் – அமைச்சர் எ.வ.வேலு!!