கள் இறக்கி வியாபாரம் செய்தவர்கள் மீது தடியடி!! பழனி அருகே பரபரப்பு!!

0
217
#image_title

கள் இறக்கி வியாபாரம் செய்தவர்கள் மீது தடியடி!! பழனி அருகே பரபரப்பு!!

பழனி அருகே கோடைகால சீசனை பயன்படுத்தி கள் இறக்கி வியாபாரம் செய்தவர்களை போலீசார் விரட்டி அடித்து வைத்திருந்த கள்ளை கீழே ஊற்றி அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது, இதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிலர் கோடைகால சீசனை பயன்படுத்தி கள்ளை இறக்கி வியாபாரம் செய்து வந்தனர்.

தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது இந்நிலையில் காவல்துறையினர் பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் ,அப்போது சிலர் கல் வியாபாரம் செய்து வந்ததும் சிலர் வாங்கி பருகி கொண்டிருந்த போது போலீசாரை கண்டதும் ஓடினர்.

தொடர்ந்து வியாபாரம் செய்ய வைத்திருந்த கள் ,பானைகளை பொருட்களை கீழே போட்டு விட்டு ஓடினர் ,இதனை தொடர்ந்து கல் இறக்கி வைத்திருந்த குடங்களில் வைத்திருந்த கள்ளை கீழே ஊற்றி அளித்தனர்.

மேலும் இதுபோன்று தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

Previous articleவியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!
Next articleபழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!!