பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!! 

0
126
#image_title

பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் விநாயகர் கோயில் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நகராட்சி அதிகாரிகள் பணிக்கு வராத நிலையில் வளாகத்தில் கோயில் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

தகவல் அறிந்து திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து கோயில் கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் கோயில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். சம்பவம் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழக உறுப்பினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே பழனி நகராட்சி அலுவலகத்தில் கோவில் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், விடுமுறை நாளில் திருட்டுத்தனமாக கட்டுமான பணியை மேற்கொள்வதாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து வளாகத்தில் தொடர்ந்து கட்டுமான பணி நடைபெறாது என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழக உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.