தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!!

0
185
#image_title

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!!

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகளை தற்போது தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து அதன் தலைவர்கள் மாறி மாறி தங்கள் கருத்துக்களை கூறி வருவது அவ்வப்போது சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூட்டணி குறித்து கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று சென்னையில் நடைபெற்ற கட்சி விழா ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள ஒன்பது மக்களவை தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளதாகவும் அந்த தொகுதிகள் மீது அதிக கவனம் தற்போது செலுத்தி மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த போவதாகவும் கூறினார்.

சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற எட்டாம் தேதி தமிழகம் வரும்போது எண்ணற்ற திட்டங்களை தமிழக நலனுக்காக அறிவிக்கப் போகிறார் எனவும், அதிமுக பாஜக கூட்டணி தற்போது வலுவாக உள்ளது அண்ணாமலை கூறிய கருத்துக்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது அவரது சொந்த கருத்து இதை சர்ச்சையாக்கவேண்டாம்.

பாஜகவை பொறுத்தவரை நாங்கள் அடையாளம் கண்டுள்ள அந்த ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து வெற்றி பெற செய்ய தேவையான முயற்சிகள் எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.

Previous articleநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!
Next articleராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!