ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

0
142
#image_title

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2019ம் ஆண்டு ராகுலின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ஏன் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் மோடி குறித்து பேசியதாக கூறப்படும் போது சம்பந்தமே இல்லாமல் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்ததாமல் ஏதோ ஒரு காரணம் சொல்லி முப்பது நாட்களில் வழக்கு விசாரணையை முடித்தது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாக உள்ளது.

இந்த வழக்கினை பொறுத்தவரை பல்வேறு சந்தேகம் உள்ளது எனவும் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிபதி அவசரமாக மாற்றப்பட்டது ஏன் ? கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பின் மறுநாள் 24ம் தேதி அவர் அவசரமாக பதவி நீக்கம் செய்தது ஏன்? அந்த பதவி நீக்க படிவத்தில் யார் கையொப்பம் போட்டது, யார் அதற்கு அனுமதி தந்தது என பல்வேறு கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.

பாஜக தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் கட்சிக்கு நல்லது செய்துள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் ராகுலின் பதவி நீக்கம் தொடர்பான கோப்புகளில் இன்னும் கையெழுத்து போடவில்லை.

எனவே பல்வேறு குளறுபடிகள் இருக்கும் பட்சத்தில், ராகுல் காந்தி தற்போது மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார். இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்சிதம்பரம் உடன் இருந்தார்.