முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

Photo of author

By Vijay

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு பன்மடங்கு வசதி கொண்ட பேருந்து நிலையத்திற்கு பணிகள் தொடங்க அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலைகள் நடந்து வந்தது.

சேலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்த போது ஆய்வு பணி மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு இம்மாதத்தில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார், மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் எனவும் கூறியுள்ளார்.

 

இதனிடையே சேலத்தில் நேற்று திமுக சார்பில் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட அமைச்சர் நேரு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தது ஐம்பதாயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால் அதற்கு தகுந்தாற்போல் கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.