மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி- மணிவண்ணன். இவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சத்யாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சத்யா வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் தங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை அண்ணா நகரில் வசிக்கும் சத்யாவின் தாய்மாமன் பெரியசாமி மனைவி சத்யாவிடம் பேசி அவரை வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்து அறிவுரை வழங்கி வந்தார்.
கடந்த ஒரு மாதமாக செந்துறையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு வீட்டிற்கு சென்று விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது செல்போனில் கள்ளக்காதலன் பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சந்தியாவின் தாயாரிடம் பேசிய கள்ளக்காதலன் சத்யா தற்கொலை செய்து கொள்ள போவதாக தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து உறவினர்கள் இரவு முழுவதும் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை வீட்டிற்கு அருகே உள்ள தேக்கு மரத் தோப்பில் சேலையில் மர்மமான முறையில் தூக்கி பிணமாக தொங்கி உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தியா கள்ளக்காதல் விவகாரத்தில் மணமடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கள்ளக்காதலன் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.