வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

Photo of author

By Savitha

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

Savitha

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளனர் தொடர்ந்து நள்ளிரவு முதல் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விருந்து உணவு சாப்பிட்டவர்களுக்கு ஒவ்வாமையால் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.

50க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நந்தகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

இதில் மயிலாடுதுறையில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர், சீர்காழியில் 17 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.