85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ

0
118
#image_title

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை.அதனால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி 11ஆம் தேதி கோட்டையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க 50,000 பேர் பங்கேற்பதாகவும்,அந்நாளில் வினாத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு மணி நேரம் மட்டும் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் திண்டுக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று 06.04.23 தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளதாவது.

முதலமைச்சர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் குறிப்பாக புதிய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். ஊதிய முரண்பாடு களையப்படும். அது மட்டுமல்ல தொகுப்பூதிய நடைமுறை தமிழகத்தில் அறவே இருக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி அளித்ததோடு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கைகளிலும் அதை இடம்பெறச் செய்தார்கள்.

ஆகவே நம்பிக்கையோடு நாங்கள் இந்த அரசுக்கு வாக்களித்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் எங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்போடு இருந்தோம். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது சட்டமன்றத்தில் மூன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை எங்களது ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை என்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது.

தமிழக முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார். ஆனால் ஆசிரியர் அரசு ஊழியர்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் சட்டசபையில் எங்களுக்கு எதிராக பேசுவதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

இன்னும் தமிழ்நாடு முதலமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 11ஆம் தேதி சென்னை கோட்டையில் ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் திரண்டு தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கையை நிறைவேற்றி தர கோரிக்கை மனு அளிக்கப்படும். மேலும் உடனடியாக தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ கூட்டமைப் பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் அன்றைய தினம் வினாத்தாள் திருத்து மையங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் மட்டுமே பணி புறக்கணிப்பு செய்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

author avatar
Savitha