ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு 

Photo of author

By Savitha

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்போம் என்று ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.