இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை 

0
176
#image_title

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை

தேனியில் இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்டுவதில் யார் அடக்கம் செய்வது என இரு மகள்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதில் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மூதாட்டியின் உடல் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் யார் அடக்கம் செய்வது என தீர்மானிக்கும் வரை மருத்துவகல்லூரியின் பிணவறையில் வைக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தேனியை சேர்ந்த வயதான மூதாட்டி அண்னதாய், இவருக்கு இரு மகள்கள் உள்ளனர், முதல் மகள் லட்சுமி திருமனமாகி நாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் மகள் வீட்டில் வசித்து வந்த அண்னதாய், பின்னர் சிறிது மாதங்களுக்கு முன்பு தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள இரண்டாவது மகள் ராமுதாய் வீட்டில் தற்போது வசித்து வந்தார்.

இந்த நிலையில் முதல் மகளுக்கும், இரண்டாவது மகளுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்த வந்த நிலையில் தீடிரென அண்னதாய் உடல் நலகுறைவினால் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள இரண்டாவது மகளான ராமுதாய் வீட்டில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது தாயினை ராமுதாய் மற்றும் அவரது குடும்பத்தினர். அடித்து கொன்று விட்டார்கள் என்று நாகபட்டினம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து நாகபட்டினம் காவல்துறையினர் இது குறித்து விசாரிக்குமாறு தேனி மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து தேனி நகர் காவல்துறையினர் இது குறித்து விசாரனை நடத்தியதில் இயற்கை மரணம் என உறுதி செய்து. அது குறித்த தகவலை நாகபட்டினம் காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது தாயின் உடலை உடனடியாக நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்குமாறும். லட்சுமி கேட்டு கொண்டதன் அடிப்படையில் உடலை நாகபட்டினத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யபட்ட நிலையில். அது குறித்த தகவலை கூற லட்சுமியை தொடர்பு கொண்ட நிலையில் அவர் செல்போனை தொடர்ந்து எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனை அடுத்து செய்வதறியாமல் திகைத்த ராமுதாயின் குடும்பத்தினர் உயிரிழந்த அண்னதாயின் உடலை தேனி நகர் காவல்நிலையத்திற்கே கொண்டு வந்தனர்.

காவல் நிலையத்தில் இறந்த மூதாட்டியின் உடலை கொண்டு வந்த நிலையில் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக லட்சுமியிடம் தொடர்பு கொண்ட போது அப்போதும் லட்சுமி அலைபேசியினை எடுக்கவில்லை.

இதனால் காவல்துறையினர் உடலை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பினவறையில் வைப்பது என்றும். இரு மகளுக்குள் இடையே யார் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்து அதற்கு பின்னர் உடலை பெற்று அடக்கம் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

இரு மகள்களுக்குள் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக பெற்ற தாயின் உடலை இறந்து பல மணி நேரம் ஆகியும். அவரை நல் அடக்கம் செய்யாமல் அலைகழித்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha