தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

0
136

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், தினந்தோறும் காலையில் ஆட்டோவில் மாணவிகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலை நேரத்தில் மாணவிகளை ஏற்றிச்சென்று வீட்டின் அருகே இறக்கி விடுவார். ஆட்டோ ஓட்டுவதை பல வருடங்களாக ராமலிங்கம் செய்து வந்தார்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்த கடுமையான சூழலில் மாணவிகளை வேறு வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டார் ஆனால், எந்த வாகனமும் அந்த வழியாக வராத காரணத்தால் வலியை பொறுத்துக் கொண்டு ஆட்டோவை இயக்கினார். பின்னர், சிறிது தூரம் கடந்து வந்த போது நெஞ்சு வலி அதிகரித்ததால் ஆட்டோவை ஓரமா நிறுத்தினார்.

ஆட்டோவை நிறுத்தியதும் மாணவிகளுக்கு பயம் ஏற்பட்டு உதவிக்கு பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். அதற்குள் ஆட்டோ டிரைவர் ராமலிங்கம் மயங்கிய நிலைக்கு சென்றுவிட்டார். பிறகு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் பள்ளி மாணவிகள் அழ ஆரம்பித்தனர்.

தன் உயிரை துச்சமாக நினைத்து பள்ளி மாணவிகளை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரின் இறப்பு பள்ளி மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Previous articleமது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!
Next articleஎப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?