திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்!!

0
287
#image_title

தீரன் சின்னமலை பிறந்தது திருப்பூர் மாவட்டம். எனவே திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் இத்திட்டத்திற்கான நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்தே எடுக்கப்படுகிறது . எனவே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை , காலிங்கராயன் – அத்திக்கடவு- அவிநாசி திட்டம் என பெயர்மாற்ற வேண்டும்.

மயிலால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் , மயில் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மயில்களின் பாதிப்பு குறித்து நாங்கள் போராட்டம் செய்த போது எங்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை அதிகாரி இப்போது பணி ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறார்.

அவர் இப்போது தனது தோட்டத்தில் மயில் பிரச்சனை அதிகமாக இருப்பதாகவும் , ஏதாவது தீர்வு இருக்கிறதா என்றும் கேட்கிறார்.

விவசாய பயிர்களை மயில்களிடமிருந்து காக்கும் வகையில் மாவட்டம்தோறும் மயில்கள் சரணாலயம் வைத்து மயில்களை அங்கு பராமரிக்க வேண்டும்.

கொத்தடிமை சட்டம் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் இருந்த நிலைமை வேறு , இப்போதைய நிலைமை வேறு. எனவே கொத்தடிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் , இன்று வேலை ஆள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

மாவட்டம் தோறும் சிபிஐ மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். வழக்குகள் விரைந்து முடியாததே குற்றங்கள் பெருக காரணம்.

ஆணும் பெண்ணும் சமம் , எனவே பெண்ணின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் .

போக்சோ சட்டத்தை 16 வயதாக மாற்ற வேண்டும்.

காவிரியை தூய்மைப்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும்.

மாற்றுத்திறனாளி கள் அரசின் சலுகையை பெறுவதற்கான வரம்பை 60 சதவீதம் என்பதில் இருந்து , 40 சதவீதமாக மாற்ற வேண்டும்.

நகரங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுகளுக்கு மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்.

கோவையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்.

Previous articleபன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!
Next articleசென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு!! 2 பேருக்கு வலைவீச்சு!!