சிறைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சர் ரகுபதி!!

0
215
#image_title

சிறைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சர் ரகுபதி!!

சிறைத்துறையில் பணியாற்றி வரும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் இடர் படி உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணீகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவல்ர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், இடர் படி ( risk allowance) 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், சிறைத்துறை துணைத் தலைவர் பதவியை சிறைத்துறை தலைவர் என்று தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.

Previous articleமீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை!
Next article10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் குழப்பம்!