சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

0
232
#image_title

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்ட செல்வகுமார்.

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க தொழிற்பிரிவு மாநில துணைதலைவராக இருந்து வருகின்றார்.

இவர் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்து திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாநகர சைபர் கிரைம் போலீசார் செல்வக்குமார் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வகுமாரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்கினர். சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பாஜக தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார்.காலை 7.30 மணிக்கு கைது செய்யப்பட்ட செல்வகுமாரிடம் சைபர் கிரைம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செல்வகுமார் ஆஜர் படுத்தப்பட்டார். வருகின்ற 26ம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வெளியே வந்த செல்வகுமார் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்டார். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Previous articleடாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!
Next articleசீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!!