ஒரே இரவில் உங்கள் பாத வெடிப்பை சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

0
285
#image_title

ஒரே இரவில் உங்கள் பாத வெடிப்பை சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

நம்மில் சிலருக்கு கால்களில் பாதங்களில் வெடிப்புகள் இருக்கும். இந்த வெடிப்புகள் குளிர்காலங்களில் அதிக அளவில் ஏற்படும். மற்றும் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப பாதத்தில் தோன்றும் வெடிப்புகள் அதிகரிக்கும். இந்த பாத வெடிப்புகளை தொடக்கத்திலேயே கவனித்து சரி செய்து விடவேண்டும்.

இல்லையெனில் இதுவும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். கால்களின் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்ய வேண்டுமென்றால் இந்த பதிவை நன்றாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளுக்காண காரணம்

முதலில் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கான காரணத்தை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

* தரையில் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு பாதங்களில் வெடிப்புகள் ஏற்படும்.

* உடல் பருமன் அதிகம் இருப்பதால் கால்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு பாதங்களில் வெடிப்புகள் வரும்.

* அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் உள்ள செருப்பு அல்லது ஷூ பயன்படுத்தினாலும் பாதங்களில் வெடிப்புகள் வரும்.

* சருமப் பிரச்சனைகள் காரணமாகவும் பாதங்களில் வெடிப்புகள் தோன்றும்.

சில நேரங்களில் பாதவெடிப்புகள் மூலம் கால்களுக்கு எந்த ஒரு வலியும் இருக்காது. அந்த நேரத்தில் கால்களை கவனிக்காமல் விட்டால் பாதவெடிப்புகள் அதிகமாகி ரத்த கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பாத வெடிப்புகளை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியம்

கால்களில் உள்ள பாதங்களை வெடிப்புகள் இல்லாத மென்மையான பாதங்களாக பெறுவதற்கு வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.

ஸ்டெப்1

முதலில் வெதுவதுப்பான நீரில் ஒரு கப் தேனை நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

உங்களின் கால்களை இந்த நீரில் 15 நிமிடம் வரை வைக்கவும்

ஸ்டெப் 3

அந்த தண்ணீர் குளிர்ந்த பின்னர் உங்கள் கால்களை கழுவி விட்டு கால்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளவும்.

தேனானது வறண்ட மற்றும் சேதமடைந்த பாதங்களுக்கு சிறந்த ஒரு தீர்வு. இது உங்களின் சருமத்தை ஈரப்பதமாக்கும்.

பாத வெடிப்புகளுக்கான சில முக்கியமான குறிப்புகள்

* உடலில் நீர்ச்சத்து குறேயும் போது சருமத்தில் வறட்சி ஏற்படும். ஆகையால் உடலுக்கு தேவையான நீரை தினந்தோறும் குடிக்க வேண்டும்.

* ஒரு நாளுக்கு ஒரு முறையாவதும் கிரீம் வடிவில் இருக்கும் மாய்ஸ்சரைசரை உங்களின் பாதங்களுக்கு தடவ வேண்டும்.

* முகத்திற்கு பயன்படுத்தும் சன்ஸ்கிரீனை பாதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

* வாரத்தில் ஒரு முறை கட்டாயம் கால்களில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். இறந்த செல்களை நீக்க பியூமிஸ் கல்லை பயன்படுத்தலாம். அதிக அளவு அழுத்தம் கொடுக்காமல் பாத வெடிப்புகள் இருக்கும் பக்கத்தில் மெதுவாக அழுத்தம் கொடுத்து இறந்த செல்களை நீக்க வேண்டும்.

* தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி உங்களது பாதங்களை பரமாரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத வெடிப்புகளில் இருந்து விடுபடலாம்.

Previous articleபல் துலக்கும் முன் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?? 
Next articleஉடனடியாக கருப்பு முகம் வெள்ளையாக மாற இதை மட்டும் தடவினால் போதும்