பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம்! ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது!

Photo of author

By Savitha

பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம் ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணின் கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி பெருமிதம்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன் பிரதமர் மோதி சந்தித்தபோது அவரது வீட்டில் பணியாற்றிய மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண்மணி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நேரில் வழங்கினார்.

அந்த கடிதத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண்மணி தான் பிற்படுத்தப்பட்ட அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவர் என்றும் ஏழை பெண்ணான தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு பெற்றிருப்பதாகவும் இது எங்கள் தலைமுறையின் முதல் சிமெண்ட் வீடு என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோதி மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக விண்ணப்பித்து பயனடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஏராளமான வாழ்க்கையை மாற்றி இருப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் அந்த இல்லம் அவர்களின் வாழ்க்கையில் தரமான வேறுபாடுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் பெண்கள் அதிகாரத்தின் முன்னணியாக திகழ்வதாக பிரதமர் மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.