இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன்

0
245
#image_title

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன்

கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்திற்கு எதிர்ப்புறம் தனியார் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார்.

வங்கியின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தில் இரண்டரை அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வெளியே வந்த போது வாகனத்தின் உள்ளே பாம்பு நெலிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டார்.

அதனை தொடர்ந்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் இருசக்கர வாகனத்தின் உள்ளே புகுந்து கொண்ட பாம்பை சுமார் 15 நிமிடம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட அந்த பாம்பை சாக்குப் பையில் கட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்ற அவர்கள் காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டனர். மாநகரப் பகுதியில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பாம்பு புகுந்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Previous articleமோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி
Next articleஅதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு