சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

0
257
#image_title

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரதமர் மோடி!!

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க அஸம் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோதி கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு இன்று கொண்டாடப்படுவதாக தெரிவித்த பிரதமர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் இந்திய அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள சமத்துவ மற்றும் நல்லிணக்கம் மதிப்பீடுகள் நவீன இந்தியாவிற்கான அடித்தளமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.

உலகம் தனது செயல் திறனை அதிகரித்து வருவதோடு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதி அமைப்பை அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.

இன்றைய 21ம் நூற்றாண்டில் ஒவ்வொரு இந்தியர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் எல்லை இல்லாதது என தெரிவித்த பிரதமர் இவற்றை நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் வலுவான மற்றும் உணர்வுபூர்வமான நீதித்துறை முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

சட்டங்கள் குறித்து அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டியது நீதியை எளிமையாக்குவதில் மிக முக்கிய பங்கு என தெரிவித்த பிரதமர் சாமானிய மக்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக தொடர்ந்து வலியுறுத்தல்களை வழங்கி வருவதாக பிரதமர் மோதி குறிப்பிட்டார்.