கோடையில் நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்

0
172
#image_title

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ் நாட்டின் மாநில மரமாக இருப்பது பனைமரம். இது தமிழ் நாட்டின் பாரம்பரிய அடையாளமாக இருக்கிறது. இதிலிருந்து பலவகையான உணவுப் பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றது.

அவ்வாறு கிடைக்கும் பல உணவுப் பொருள்களில் முக்கியமான உணவுப் பொருளாக இருப்பது நுங்கு. இந்த நுங்கு வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கிறது.

இந்த நுங்கின் மேல் பகுதியில் உள்ள துவர்ப்பு சுவையுள்ள தோலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கின்றது.

அவ்வாறு நுங்கிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

* கோடை காலமான வெயில் காலத்தில் தாகம் தனியவும், உடல் சூடு குறையவும் நுங்கு ஒரு அற்புதமான உணவாக இருக்கிறது. நுங்கு சாப்பிடுவதால் நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படமால் தடுக்கப்படுகிறது.

* உடலில் அதிக சூட்டால் கண் எரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

* நுங்கை சாப்பிடுவதால் இதில் உள்ள சத்துக்கள் அதீத பசி உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பினை அதிகப்படுத்துவதால் நுங்கானது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

* நுங்கில் ஆன்தோசயன் என்னும் மூலக்கூறு உள்ளது. இந்த ஆன்தோசயன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோயை தடுக்கிறது.

* கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்க நுங்கு உதவுகிறது.

* கடின உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லாரும் நுங்கை சாப்பிட்டால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் நுங்கிலிருந்து கிடைக்கின்றது.