இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!
நம்மில் பலருக்கு தலை முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவில் இருக்கும். இதற்கு பலவகையான மருத்துவங்களை மருந்துகளை எடுத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எல்லாம் பயனில்லாமல் போயிருக்கும். அதற்கு பதிலாக கருஞ்சீரகத்தை எண்ணெய் செய்து தலைக்கு பயன்படுத்தி பாருங்கள். முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது.
கருஞ்சீரகத்தில் எண்ணெய் தயாரித்து அதை நம் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.
தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. அதாவது சத்து குறைபாடு, பொடுகு, அழுக்கு சேர்ந்து பிசுபிசுப்பு தன்மை இருப்பது, தலைமுடியை சரியான முறையில் பராமரிக்காமல் இருப்பது, டென்சன் போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.
முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கருஞ்சீரகம் தான். அதாவது வீட்டிலேயே கருஞ்சீரகத்தில் எண்ணெய் செய்து தலைக்கு பயன்படுத்தலாம். கருஞ்சீரகத்தில் எண்ணெய் செய்து தலைக்கு பயன்படுத்துவதால் முடி உதிர்வது கட்டுப்படுகிறது. மேலும் இந்த எண்ணெயை இளஞ்சூடாக தலைக்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்கலாம்.
தேங்காய் எண்ணெய், தேன் போன்றவற்றை கலந்து இந்த கலவையை கருஞ்சீரக எண்ணெயுடன் சேர்த்து உள்ளங்கைகளில் ஊற்றி இரு கைகளிலும் நன்றாக தடவ வேண்டும். பிறகு இதை தலையில் உள்ள ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது கருஞ்சீரக எண்ணெய்யை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு லோசான சுடு தண்ணீரில் துண்டை நினைத்து அதை பிழிந்து அந்த துண்டை தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலாசலாம். இது போல வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
இவ்வாறு கருஞ்சீரக எண்ணெய்யை பயன்படுத்தும் பொழுது தலைமுடியின் வறட்சி நீக்கப்பட்டு முடியின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. இதனால் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு முடியானது நன்கு நீண்டு வளர உதவுகிறது. இது மட்டுமில்லாமல் முடி உதிர்வு தடுக்கப்படுவது மட்டுமில்லாமல் நரைமுடி வராமல் பாதுகாக்கப்படுகிறது.