தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!! 

0
181
#image_title

தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!!

புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு புகார் தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மருத்துவ ரீதியாக நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு மருத்துவத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதன்படி சென்னை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு ஓட்டேரி போலீசார் இந்த புகார் தொடர்பாக குழு ஒன்றை அமைத்து உரிய முறையில் விசாரணை நடத்த பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதனை அடுத்து மருத்துவக் கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில் மருத்துவ வல்லுனர் குழு அமைக்கப்பட்டு சிறுமியின் அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஒருவேளை தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் முதற்கட்டமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மருத்துவ கல்வி இயக்குனரகம் காவல்துறைக்கு அளிக்கும் பரிந்துரையின்படி மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள்.

Previous articleகுடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!!
Next articleபுல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!