புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!

0
105
#image_title

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்ததற்கு உளவு பிரிவின் தோல்வியே காரணம் என தான் கூறிய போது தன்னை அமைதியாக இருக்கும் படி பிரதமர் மோதி கூறினார்.

ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக்.

ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோதிக்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள நேர்காணல் ஒன்று சர்ச்சையை அதிகரித்துள்ளது.

தி வைர் என்ற ஆங்கில ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கிய ஜம்மு ஜஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் 2019 ம் ஆண்டு 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் குறித்து பேசும்போது தங்களது பணியாளர்களின் போக்குவரத்திற்காக சி ஆர் பி எப் க்கு விமானம் ஒன்று தேவைப்பட்டதாகவும் இவ்வளவு அதிக அளவிலான வீரர்கள் பொதுவாக சாலைகளில் பயணம் செய்வது இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தை அவர்கள் அணுகியபோது அவர்களது கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோதி தன்னை தொலைபேசியில் அழைத்த போது இந்த விவகாரங்களை தான் அவரிடம் தெரிவித்து இது நம்முடைய தவறு நாம் விமானத்தை வழங்கி இருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்று தெரிவித்ததாகவும் அதற்கு பிரதமர் மோதி நீங்கள் தற்போது அமைதியாக இருங்கள் இவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடமும் தான் இது குறித்து பேசிய போது அவரும் இவை அனைத்தையும் பேச வேண்டாம் அமைதியாக இருங்கள் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது 100% உளவு பிரிவின் தோல்வி என குறிப்பிட்ட அவர் 300 கிலோ வெடி பொருட்கள் அடங்கிய கார் அருகில் உள்ள கிராமங்களுக்கு 10 12 நாட்களாக சென்று வந்த நிலையில் அது குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோதி ஊழலை பெரிய அளவில் வெறுக்கவில்லை என தெரிவித்த அவர் கோவாவில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து புகார் தெரிவித்த போது அங்கிருந்து மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Savitha