டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

0
184
#image_title

ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வருவோம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்.

சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதேபோல் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக அல்லாத மாநிலங்களின் அதிகாரங்களை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு மற்றும் அதன் பிரதிநிதிகளை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் முயற்சி ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுனர்களின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

Previous articleபருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது – பிரதமர் மோடி!!
Next articleஇரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!