அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும்.

ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும், குறிப்பாக அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு வரை வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும்.

கோடிட்டு காட்டியுள்ள கல்வி ஆணையர், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

வரும் 17ம் தேதி முதல், 27ஆம் தேதி வரை இந்த விழிப்புணர் உணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.