புதுக்கோட்டையில் நகர் பகுதியான நிஜாம் காலனியில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் சிரஞ்சீகள் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதை ஊசிக்காக பயன்படுத்தினதா அல்லது மருத்துவ கழிவுகளா என்பது குறித்து சுகாதாரத்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் வேளையில் புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் 1000க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிரஞ்சுகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளன. அங்குள்ள தெரு நாய்கள் பாக்கெட்டுகளில் இருந்து ஊசிகள் மற்றும் சிரஞ்சீகள் இழுத்து வந்து சாலைகளிலும் சிதரவிட்டு சென்றுள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் பதற்றம் அடைந்து நகராட்சி நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து நிஜாம் காலனி பகுதி மக்கள் கூறுகையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக்கொண்டு அவற்றை இங்கு கொண்டு வந்து கொட்டியுள்ளனர் அல்லது மருத்துவமனைகளில் இருந்து ஏதாவது மருத்துவக் கழிவுகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிரஞ்சீகள் ஆகியவை சாலைகளில் தூக்கி வீசறியப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இந்த கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.நகரின் முக்கியமான பகுதியில் உள்ள சாலையில்
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் தலையிட்டு மருத்துவ கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.