கடந்த 8 மாதங்களாக ஜீ-தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க“ சினிமாவிலிருந்து விலகி, சீரியலில் நடிக்க தொடங்கினார் அர்ச்சனா.
இதுகுறித்து அவர் முன்பு கூறியிருந்ததாவது, மீனாட்சி பொண்ணுங்க“ சீரியல் கன்னடாவில் தான், முதன் முறையாக எடுக்கப்பட்டது. அதில் வரும், அம்மா கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்.
அதை தமிழில் எடுக்க போகிறார்கள் என்றவுடம் சந்தோஷம் தான், அதிலும் நான், அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
எனவே, உடனே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என, இதற்கு முன் கூறியிருந்த அர்ச்சனா.
தற்போது சீரியலில் இருந்து விலகி இருப்பது ஏன்? என உடன் நடித்தவர்களிடம் கேட்டபொழுது,
சீரியலில் அவர் நடித்த நடிப்பும், அதற்கென அவர் உழைத்த உழைப்பும் குறைசொல்லும்படி இருக்காது, கன்னடத்தில் எடுத்த கதையை போலவே, தமிழிலும் இருக்குமென நினைத்து அவர், சம்மதித்துள்ளார்.

என்னை விட்டு விடுங்கள் என, எங்கள் தயாரிப்பாளரிடம் பேசினார், ஆனால் தயாரிப்பாளர் பல்வேறு காரணங்களை சொல்லி சிறிது காலம் நடிக்க வைத்தார். என உடன் நடித்தவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக அர்ச்சனாவிடமே பேசியபோது, நீங்கள் கேட்ட அனைத்தும் உண்மை தான், பிடிக்காத ஒரு இடத்தில் எப்படி என்னால் இருக்க முடியும்.
செய்யும் வேலையை மனநிறைவுடன் செய்ய வேண்டும், எனவே தான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன், என அர்ச்சனா கூறியுள்ளார்.