பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்

0
233
#image_title

பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்

திமுக அரசால், லண்டன் மாநகரில் நிறுவப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
லண்டன் மாநகரில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களால், பென்னிகுயிக் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் பென்னிகுயிக் சிலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளார்.
அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
5 மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்த்து, வாழ்வாதாரத்தை உயர்த்திய முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்த கர்னல் ஜான் பென்னி குயிக்கிற்கு இந்த அரசு லண்டன் மாநகரில் அமைத்த மார்பளவு சிலை தற்போது கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சேதமடைந்திருப்பதாகவும்,
செய்திகள் வெளி வருகின்றன.
இந்நிலையில் சிலை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் திரு. பீர்ஒளி என்பவர் தனது பேட்டியில் சிலை அமைக்கும் செலவில் மீதமுள்ள ரூ 46 லட்சம் தொகையினை அட்லாண்ட்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்காத காரணத்தினால் கொடுத்த புகாரின்பேரில்
தற்போது கருப்பு துணியால் மூடி சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
உண்மை நிலை அறிந்து, மூடிய சிலையினை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலை சேதமடைந்திருந்தால், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்றும்,தொடர்ந்து சிலை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Previous articleநாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு
Next articleபதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்