செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! 

0
127
#image_title

செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்க உறுதி செய்யப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதியில் செயல்பட்டு வரும் கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்ததாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில் பணீ இழந்தவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

அதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன், சம்பந்தப்பட்ட கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கடந்த ஏப்ரல் 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், முதற்கட்டமாக 50 பேருக்கு பணி வழங்க நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிவித்தார். இருந்த போதும் பணி இழந்த அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்பதால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.