அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் அதிக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…
அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னாள் நீதிபதி மாசிலாமணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் எந்த தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் அதனை அந்த குழுவில் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் இடைநீக்கம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் எதன் அடிப்படையில் வெளியிடப்பட்டது என விளக்கம் கோரி கடிதம் எழுதி இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.