தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு!!

0
265
#image_title

தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தின்கீழ் நீர்வளத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட 7 துறைகளுக்கு உலக வங்கி நிதி உதவி அளித்துள்ளது.

இதில், நீர்வளத்துறை சார்பில் மயிலாடுதுறையை அடுத்த மறையூர் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறையூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளிடம் உலக வங்கி குழு உறுப்பினர் டாக்டர் மங்கத் ராம் கார்க் கலந்துரையாடினார்.

தொடர்ந்து கால்நடைகள் பராமரிப்புக்கான பராமரிப்பு பொருட்களை அவர் வழங்கினார். இதில், பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) செயற்பொறியாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கூடுதல் இயக்குனர்கள் இளங்கோவன், சுந்தர்ராஜன், மனோகரன், வேளாண்துறை இணை இயக்குநர் சேகர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, மறையூர் கிராமத்தில் கூட்டுறவு பால் பண்ணை அமைத்துத் தர விவசாயிகள் உலக வங்கி பிரதிநிதியிடம் கோரிக்கை வைத்தனர்.

Previous articleசட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
Next articleவெயில் நேரத்தில் பொதுமக்கள் இனி அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக் தேவையில்லை!! கோவை மாநகர காவல் துறை அசத்தல் முயற்சி!