திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் – உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!!

0
307
#image_title

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை – உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!!

திருச்சி மாநகரம் வாமடம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(24). பி காம் பட்டதாரியான இவர் திருச்சி தில்லைநகர் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் கோட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக கரூரிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் திடீரென பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்களும் போலீசாரும் ரயிலின் அடிபாகத்தில் சிக்கிய பிரேம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரேம்குமாருக்கு நீண்ட நாட்களாக தலைவலி இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக திருச்சியில் இருந்து கரூர் சென்ற அதே பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேல் எழும்புகிறது – இலங்கை அமைச்சர் ரஞ்சிதா பண்டாரா!!
Next article70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு – 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததின் புதிய தகவல்!!