பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர்!

0
123
#image_title

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர். பேருந்தை கட்டுபாட்டோடு நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டசம்பவம்.

வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் இல் இருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்தில் ஓட்டுநராக பணி புரிபவர் கார்த்திகேயன்

வழக்கம் போல் இன்றூ அஜாக்ஸ் பனிமனையில் இருந்து பேருந்தை பூந்தமல்லி நோக்கி இயக்கி கொண்டு சென்றிருந்தார். பேருந்து சரியாக கல்மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டூநர்கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சுதாரித்து கொண்ட ஓட்டுநர் கார்த்திகேயன் பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையின் ஓரமாக நிறுத்தி பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டுள்ளார். பின்னர் தமக்கு மயக்கமாக உள்ளதென பேருந்தூ நடத்துனரான நாராயணசாமியிடம் கூறியுள்ளார்

நாராயண சாமி பேருந்தை விட்டு கீழே இறங்கி அருகாமையில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவா விடம் கூறவே

உதவி ஆய்வாளர் மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்தூவமனைக்கு ஓட்டுநர் கார்த்திகேயனை தங்களது வாகனத்திலேயே கொண்டு சென்று அனுமதித்தனர்

அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் குறைந்த ரத்த அழுத்தத்தினால் மயக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறி முதலுதவி சிகிச்கை அளித்துள்ளனர்.சிகிச்சைக்கு பிறகு ஓட்டுநர் கார்த்திகேயன் வீடு திரும்பியுள்ளார்.

திடீரென பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்டாலும் கூட சுதாரித்து கொண்டு பேருந்தை ஓரம் நிறுத்தி பயணிகளுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இறக்கிய ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
Savitha