அல்சர் முற்றிலும் நீங்க இந்த 1 உப்பு போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

அல்சர் முற்றிலும் நீங்க இந்த 1 உப்பு போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

அலசர் நோயால் தினமும் அவதிப்படுபவர்களுள் பல பேர் பலவிதமான மருந்துகளை உட்கொண்டு எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். இந்த வீட்டு வைத்தியத்தை செய்தால் அல்சர் ஒரு வாரத்தில் இல்லாமல் போய் விடும்.

அல்சர் நோய் என்பது நம் சாப்பிடும் உணவு செல்ல உதவும் தொண்டை, இரைப்பை, உணவுக்குழாய், முன் சிறுகுடல் இந்த இடங்களில் ஏற்படும் புண்கள்தான் அல்சர். இரைப்பை, முன்சிறு குடல், உணவுக்குழாய் என அனைத்திலும் புண்கள் ஏற்பட்டால் பெப்டிக் அல்சர் என்றும், முன்சிறுகுடல்லி ஏற்படும் புண்களை டியோடினல் அல்சர் என்றும், இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் அழைப்பர்.

இதில் அதிகம் நமக்கு வரக்கூடியது கேஸ்ட்ரிக் அலசர். இது நாம் சாப்பிட்ட பிறகு புளித்த ஏப்பம் வரும். இதைத்தான் கேஸ்ட்ரிக் அலசர் என்று அழைப்பர். இதை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தயிர் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

சீரகப்பொடி – கால் டீஸ்பூன்

இந்து உப்பு – சிறிதளவு

செய்முறை

ஒரு டம்ளரில் ஒரு டீஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு கால் டிஸ்பூன் சீரகப் பொடி சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விட்டு பிறகு குடிக்கலாம்.

இதை எப்பொழுது குடிக்க வேண்டுமென்றால் காலை நேரத்தில் சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் கழிந்து இதை குடிக்கலாம். இரவு தூங்கச் செல்லும் அரை மணி நேரத்திற்கு முன்பு இதை குடிக்கலாம்.

அல்சர் பிரச்சனை அதிக அளவு இருந்தால் ஒரு நாளைக்கு நான்கு முறை இதை குடிக்க வேண்டும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கோஸை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மணத்தக்காளி கீரையையும் சாப்பிட வேண்டும்.