ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மற்றொருவர் சிக்கினார்.
காஞ்சிபுரம் பகுதியில் ஜிகேஎம் சுபமங்களா மேரேஜ் ஈவன் மற்றும் ஜி கே எம் டிரேடிங் நிதி நிறுவனம் பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சகோதரர்களான ராஜா செந்தாமரை மற்றும் முத்து ஆகிய இருவர், காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா நிறுவனத்திற்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தார்.
அதிலும் குறிப்பாக ராஜா செந்தாமரை நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை மக்களிடம் பெற்று அதை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதனை அடுத்து ஆருத்ரா முகவராக இருந்த வந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இடம் சுமார் 600 கோடி முதலீடாக பெற்றுள்ளார் ராஜா செந்தாமரை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ராஜா செந்தாமரிடம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்