என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்!
16-வது ஐபிஎல் டீ 20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.
இதனை தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி துவக்கம் முதலே சற்று நிதானமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர். சென்னை அணியில் கான்வே மட்டும் அதிக பட்சமாக 77 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது வெற்றியை பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை தக்கவைத்தது.
போட்டி முடிந்தவுடன் தோனி ரசிகர்கள் குறித்து கூறினார் அதில், என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்.என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர் என்றார்.
தோனி சென்னை அணி ரசிகர்கள் குறித்து இவ்வளவு உருக்கமாக கூறியது, அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.