முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
237
#image_title

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாகத்தை கண்காணிக்க குழு ஒன்று அமைக்க உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வு, 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Previous article12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு! 
Next articleஅடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!  வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!