வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவர் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் டிசம்பரில் இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் செல்போனில் பேசியபடியும், வாட்ஸ்சப்பிலும் எட்வின் மூழ்கியிருந்தார். இவரின் செயல்பாடு இரவு முழுக்க அதிகரிக்க ஆரம்பித்தது. தனி அறையில் விடிய விடிய பேசுவது நாளுக்கு அதிகரிக்கவே, மனைவிக்கு இவரின் மேல் சந்தேகம் எழுந்தது. கணவரின் செயல்பாடுகளை தந்திரமாக அறிய முயற்சித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனி அறையில் இருந்த கணவரின் செல்போன்களை ஆராய்ந்த போது எட்வின் மனைவி பேரதிர்ச்சியை அடைந்தார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களில் வேறு பெண்களுடன் புகைப்படம், நெருக்கமான வீடியோக்கள் இருந்தன. இந்நிலையில், எட்வின் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் கொடுத்தார்.
இதுகுறித்து அவர் மனைவி கூறதாவது:
அவரிடம் நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணை கார்ப்பமாக்கி கருவை கலைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த பெண் கேள்விகேட்டபோது இதையெல்லாம் நீ கண்டு கொள்ளாதே, யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 30 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளதாக அவர் மனைவி தெரிவித்தார். வீட்டு மாடியில் நின்று கொண்டு அருகே உள்ள பெண்களை படம் எடுப்பார். வங்கிக்கு வரும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் மிரட்டினார் என்றும் கூறப்படுகிறது.
பின்னர், காவல்துறையின் மூலம் எட்வின் கைது செய்யப்பட்டார், முன்கூட்டியே தனக்கான ஜாமீன் வாங்கியிருந்தும் புகைப்படம் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அவரது ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் எட்வின் ஜெயக்குமார் மீது, ஆபாச படம் எடுத்து துன்புறுத்துதல், பெண்களை அவமதிப்பது, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எட்வின் ஜெயக்குமாரும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் தலைமறைவாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை அவர்களை விரைவில் கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.