தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு

0
188
#image_title

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு

மதுரை அருகே கோவிலில் திருவேடகம் ஏடகநாதர் கோவிலில்  திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு தமிழக அரசால் கண்டெடுப்பு.

மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமையான சிவத்தலமான ஏடகநாதர் கோவில் உள்ளது . இக்கோவிலில் ஓலைசுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது கோவிலில் தங்க ஏடும், கோவில் வரவு – செலவு கணக்கு அடங்கிய சுவடிக் கட்டும் இருந்தன. தங்க ஏட்டில் பக்தி இலக்கியப் பாடல் பதிந்த நிலையில் கிடைப்பது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தனர் .

இதுகுறித்து உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் சுவடித்துறை பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறியது:

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 45 ஆயிரத்திற்கும் மேலான கோவில்களில் ஓலைசுவடிகள், செப்புப் பட்டயங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறோம் . இதுவரை 200-க்கும் அதிகமான கோவில்களில் கள ஆய்வு செய்துளோம்.

 இலக்கியப் பாடல் தங்க ஏட்டில் பதித்த நிலையில் கிடைப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை. கோவில் தல புராணப்படி திருஞான சம்பந்தர் ‘வாழ்க அந்தணர் ‘ எனும் பதிகம் எழுதி , வைகை நதியிலட்டதன் நினைவாக அப்பாடலைத் தங்க ஏட்டில் எழுதி பாதுகாத்து வருகின்றனர் . எழுத்தமைதி முலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம் என்றார்.

Previous articleசூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் 
Next articleஇரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது