ஜொமாட்டோ டெலிவரி ஊழியர் கத்தியால் குத்தி கொலை! ஓட்டல் வெளியே நடந்த கொடூர சம்பவம்..!!

Photo of author

By Jayachandiran

ஜொமாட்டோ டெலிவரி ஊழியர் கத்தியால் குத்தி கொலை! ஓட்டல் வெளியே நடந்த கொடூர சம்பவம்..!!

மும்பையில் போவாய் நகர பகுதியில் ஜொமோட்டோ ஊழியர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜொமாட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருந்த அமோல் பாஸ்கர் என்ற இளைஞர் வழக்கம்போல தனது ஆர்டருக்காக ஓட்டல் வெளியே காத்திருந்தார். ஓட்டலுக்கு வெளியே தள்ளுவண்டியில் பழக்கடை வைத்திருந்த தினேஷ் சிங் என்பவருடன் முதலில் சிறிய பேச்சுத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கடும் போபமடைந்த தினேஷ் சிங் பழத்தை அருக்க வைத்திருந்த கத்தியை எடுத்து கோபத்தில் அமோல் பாஸ்கரை கொடூரமாக குத்தினார். நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயப்பட்ட அமோல் அங்கேயே சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அமோல் பாஸ்கரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த தகவலை கேட்டு தினேஷ் சிங் தனது சொந்த ஊருக்கு தப்பியோட முயற்சித்தபோது, குர்லா ரயில் நிலையத்தில் ஏற்கனவே போலீசார் உஷாராக இருந்ததால் அவர்களிடம் மாட்டிக் கொண்டார். தினேஷ் சிங் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த அவரது நண்பர் ஜிதேந்தர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், ஏற்கனவே இருவருக்கும் சிறிய சண்டைகள் நடந்ததாகவும் அதன் தொடர்ச்சிதான் இந்த கொலையில் முடிந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.