டெல்லியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்வு!

0
200
#image_title

டெல்லியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்வு

டெல்லியின் மேயராக ஆம் ஆத்மிக் கட்சியை சேர்ந்த தற்போதைய மேயரான ஷெல்லி ஓப்ராய் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக வேட்பமான தாக்கல் செய்திருந்த பாஜகவின் ஷிக்கா ராய் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியின்றி ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஃபெப்ரரி மாதம் தான் ஷெல்லி ஓப்ராய் மேயராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்த நிதியாண்டின் புதிய மேயராக ஷெல்லி ஓப்ராய் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில மாநகராட்சி சட்டத்தின் படி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார்.

கடந்த நிதியாண்டின் மேயர் தேர்தல் மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பது வார்டுகள் மறு வரையறை செய்வது போன்ற பணிகள் காரணமாக மேயர் தேர்தல் தள்ளி போனது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆம் அதிமுக கட்சி அதிக இடங்களில் வெற்றி மாநகராட்சியை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற மேயர் தேர்தலில் 150 வாக்குகள் பெற்று பாஜகவின் ரேக்கா குப்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றார் கட்சியின் ஷெல்லி ஓபராய்.

இருப்பினும் கடந்த நிதியாண்டின் சுழற்சி ஏப்ரல் ஒன்றாம் தேதியோடு நிறைவடைந்த நிலையில் மேயர் ஷெல்லி ஓப்ராயின் பதவி காலமும் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த நிதியாண்டுக்கான மேயர் தேர்தலில் பொது பிரிவில் போட்டியிட்ட சொல்லி ஓபராய் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

Previous articleவீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை
Next articleபித்தவெடிப்பிற்கு இந்த ஒரு பழம் போதும்! தெரியாமல் காசை அதிகம் செலவு பண்ணாதீங்க!