மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

0
177
#image_title

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு.

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சேட்டு ( வார்டு எண் 34) குப்பைகள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. சாலை வசதி பிரச்னை, விளையாட்டு திடல் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்களுடன் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார்.

இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக- அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மேயர், துணை மேயர் குறுக்கிட்டு பேசினர்.

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.