பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!

0
170
#image_title
பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!!
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதியளித்துள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற  உடன் கடலுக்கு நடுவே 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊடகங்களில் இது பெரிதும் பேசப்பட்டது.
கடலுக்கு நடுவே கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து பொதுமக்களிடையே கருத்துக் கூட்டமும் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.
கடலுக்கு நடுவே பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் உதைப்பேன் என்றும் சீமான் ஆவேசமாக பேசினார்.
இதற்கிடையே நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும்  இதற்கு அனுமதி அளித்தது் இருப்பினும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை். பிறகு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்து தற்போது முழு அனுமதியும் தந்துள்ளது.
இதுகுறித்து சீமான் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல் என்று சாடினார். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும், மக்கள் விரோத – சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன் என்றும் சீமான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Previous articleஅரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!
Next articleதமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!