இந்த இரவு உணவு உங்கள் உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம்!! மக்களே எச்சரிக்கை!!

0
228
#image_title

மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு மிகவும் முக்கியமானதாகும். காலை மற்றும் மதிய வேளைகளில் நாம் எவ்வளவு கனமான உணவுகளை உட்கொண்டாலும், அது செரிமானம் ஆகிவிடும். ஆனால் நாம் இரவு நேரங்களில் எளிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் சீக்கிரமாக செரிமானமாகும்.

இரவில் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும் உணவுகளை உண்பதால் தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை உண்டாகும். இப்போது இரவில் உண்ணக்கூடதா உணவுகளை பார்க்கலாம்.

இரவு உணவில் தயிரை சேர்த்து கொள்ளாதீர்கள். தயிர் உடலுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும், இது செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும்.

இது கீரை வகைகளுக்கும் பொருந்தும்.

 

தக்காளியை இரவில் சாப்பிட்டால் அது தூக்கமின்மையை கொடுக்கும். இதிலிருக்கும் ஒரு வகையான அமிலம் மூளையை சுறுசுறுப்பாக்கி, தூக்கம் வர நேரம் எடுக்க வைக்கிறது.

 

நிறைய மசாலா சேர்த்த உணவுகள், பிரியாணி, புரோட்டா, அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை இரவில் எடுப்பதால், சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உடல் உஷ்ணத்தை அதிகரித்து தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

 

அதுபோல் இரவு நேரங்களில் டீ, காபி போன்றவை அருந்த கூடாது. இதிலிருக்கும் காஃபின் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதாலும் தூக்கம்வருவதில்லை. இரவில் சூடான பானங்களை அருந்தாது போல் குளிர்ச்சியான பொருட்களையும் சாப்பிடக்கூடாது. ஐஸ்கிரீம், ஆரஞ்சு, திராட்சை போன்றவை சாப்பிடுவதால் தூக்கம் கெடுவதோடு, ஜலதோஷம் பிடிக்கும்.

 

வெள்ளரிக்காய், கத்தரிக்காய் மற்றும் பிராக்கோலி ஆகியவையும் தூக்கமின்மையை உண்டாக்கும். இரவில் ஜூஸ், இளநீர் குடிப்பதை தவிர்க்கவும். இரவில் எளிமையான உணவுகளை எடுத்து கொண்டால், அது துரிதமாக செரிமானமாகி, நல்ல உறக்கத்தை தழுவலாம்.

Previous articleஇப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!
Next articleஅரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!