திமுக ஆட்சி அமைந்த பிறகு சமயபுரம் கோயில் டெபாசிட் தொகை குறைந்துள்ளதாக புகார் !

0
206
#image_title

திமுக ஆட்சி அமைந்த பிறகு திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலின் வைப்பு நிதியளவு குறைந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து,  திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 ஆண்டில் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் 422 கோடி குறைந்துள்ளதாகவும் , அந்த நிதியிலிருந்து இன்னோவா , ஸ்கார்பியோ என 2 கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்துக்கு , கோயில் இணை ஆணையர் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரமேஸ் என்கிற நபர் சமூக வலைதளங்களில் தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

திமுக ஆட்சியமைந்தபிறகு சமயபுரம் கோயிலின் வைப்பு நிதி 111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் , திருக்கோயில் நிர்வாகத்திற்காக பழைய கார்களுக்கு மாற்றாக புதிய கார்களை வாங்குவது வழக்கமானதுதான் என்றும் அதில் எந்த குற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் சமயபுரம் கோயிலின் வைப்பு நிதி காணாமல் போயிருந்தாலோ , வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ தற்போது எப்படி வைப்பு நிதி உயர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறைக்கு களங்கம் கற்பித்து , தங்களது பணி வேகத்தை குறைக்கும் நப்பாசையில் இதைப்பற்றி விமர்சனம் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமயபுரம் கோயில் நிதி தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர் மீது இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தபோது சமயபுரம் கோயிலில் 1.6.21 அன்று 454.40 கோடி வைப்பு நிதி இருந்தது. 1.4.21 ம் தேதி நிலவரப்படி 566.36 கோடி வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.சமயபுரம் கோயிலின் வைப்புநிதி கடந்த 2 ஆண்டில் 111.95 கோடியளவு உயர்ந்துள்ளது.

பணம் காணாமல் போயிருந்தாலோ , வேறு பயன்பாட்டுக்கு சென்றிருந்தாலோ எப்படி வைப்பு நிதி கூடும் ? இந்து சமய அறநிலையத்துறைக்கு களங்கம் கற்பித்து , எங்களது பணி வேகத்தை குறைக்கும் நப்பாசையில் பரப்பப்படும் விசமப் பிரசாரம் இது. வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம் , சமயபுரம் கோயில் நிதி , முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக என் மீது வழக்கு தொடுத்தாலோ , குற்றச்சாட்டு எழுந்தால் மீண்டும் விளக்கம் அளிக்க நான் தயார்.

திருக்கோயில் நிர்வாகத்திற்கு கார் வாங்குவது வழக்கமானதுதான் , அதில் எந்த குற்றமும் இல்லை. புதிய அரசு அமைந்தபிறகு முதலமைச்சர் மூலம் 108 வாகனங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு வாகனம் வாங்குவதை குற்றம் சொல்வது உப்புசப்பற்ற குற்றச்சாட்டு.

நான் உட்பட அனைவரும் அரசின் காரை குடும்ப பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை. கோயில் நிதியில் இருந்து ஏதேனும் பயன்பாட்டிற்காக நிதி எடுத்தாலும் அதன் கணக்கு திருக்கோயில் வசம் இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தபின் அனைத்து கோயில்களிலும் வைப்பு நிதி உயர்ந்துள்ளது “என்று கூறினார்.

Previous articleகர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது – ஓ.பன்னீர் செல்வம்!
Next articleஅரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!