பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!

0
204
#image_title

வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு , இந்த வாரத்தில் இருந்து துவங்குகின்றன . இது குறித்த அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வரும் 8 ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதை அடுத்து உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் பல்வேறு துறைகளிலும் வேகம் எடுத்து இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் இது குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது .

இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் கூறும் போது, இன்னும் இரண்டு தினங்களில் ஆன்லைன் பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

நான்காம் தேதியில் இருந்து ஆன்லைன் பதிவு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 402 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டும் இதே அளவிற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!
Next articleஎன்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!