முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

0
213

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மய்ங்க் அகர்வால் 34 ரன்களுக்கு அவுட் ஆக இந்தியாவின் நிலை மேலும் மோசமானது.

அவரை அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் உடனே நடையைக் கட்டினார். அவருக்கு பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பண்ட் வந்து பொறுமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களை பற்று கவலைப் படாமல் தடுப்பாட்டம் ஆடினர். 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம்  முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட முடிவில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5விக்கெட்க்ளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களோடும் பண்ட் 10 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

Previous articleபிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு
Next articleஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here